Glossary - பொதுவான பதங்கள்
- Nov 3, 2023
- 3 min read
நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு தயாராகிக்கொண்டு இருந்தால், வைத்தியர்கள் அல்லது bloggers சில நூதன வார்த்தைகளை பிரயோகிப்பதை அவதானித்து இருப்பீர்கள். சில நேரங்களில் அப்படியானால் என்ன அதன் அர்த்தம் என்ன என்று கொஞ்சம் குழப்பமும் சஞ்சலமும் ஏற்படலாம். அதனால் இன்று உங்களோடு அப்படி சில வார்த்தைகளை மொழிபெயர்த்து கொடுக்க விரும்புகிறேன்.
Anti-Müllerian Hormone (AMH) - இந்த இரத்த பரிசோதனை உங்கள் உடலில் உள்ள கருமுட்டையின் அளவை பரிசோதிப்பதாகும். நீங்க ivf முறையில் கருத்தரிக்க முயன்றால், இந்த இரத்த பரிசோதனை கண்டிப்பாக செய்வது அவசியம்.
Artificial insemination - உடல் உறவு அல்லாமல் ஒரு பெண்ணின் கருப்பை வாய்க்குள் ஆணின் விந்தணுவை செயற்கையாக உட்செலுத்தல்.
Assisted Hatching - ஒரு கருமுட்டைக்குள் ஊசி, லேசர், மற்றும் உரிய மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி கரு உருவாக உதவி செய்தல்.
Assisted Reproductive Technology - ஒரு மனித உடலுக்கு புறம்பாக ஒரு ஆய்வகத்தில்/ சோதனை கூடத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்து ஒரு கருவை உருவாகும் சிகிச்சை.
Blastocyst - கருக்கட்டலின் பின் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வளர்ச்சியடைந்த கரு.
Blastocyst transfer - செயற்கையாக ஒரு பெண்ணின் உடலுக்கு வெளியே கருகட்டப்பட்ட ஐந்து அல்லது ஆறு நாட்கள் வளர்ச்சியடைந்த கருவை ஒரு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தும் செயல் முறை.
Cervix - கருப்பை வாய்.
Cervical Mucous - விந்தணுக்களை கருப்பை சுவரை நோக்கி கொண்டு செல்ல பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில்/யோனியில் காணப்படும் சளித்தன்மை வாய்ந்த திரவம்.
Clinician - கருத்தரித்தல் சிகிச்சையை வழங்கும் மருத்துவர், ஆலோசகர் அல்லது ஆய்வுகூட ஆய்வாளர்.
Clomifene citrate (Clomid) - க்ளோமிட் எனப்படுவது ஒரு மருந்து - இந்த மருந்து நம்முடைய சூலகம் அதிக கருமுட்டைகளை உருவாக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். நீங்கள் கருத்தரிப்பு மையத்துக்கு போவீர்களானால், அல்லது உங்களுக்கு PCOS பிகாஸ் அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி (Irregular period) இருக்குமாய் இருந்தால் முதலாவது இந்த சிகிச்சையை தான் வைத்தியர்கள் அதிகமாக இங்கிலாந்தில் பரிந்துறைப்பார்கள்.
Conception - கருத்தரித்தல் - ஒரு கருமுட்டை ஆணின் விந்தணுவோடு இணைந்து கருத்தரிக்கும் நிகழ்வு.
Donar conceived people - ஒரு ஆணின் விந்தணுவை டோனர் மூலமும் ஒரு பெண்ணின் கருமுட்டையை டோனர் மூலமும் பெற்று அதன் மூலம் கருத்தரிக்கப்பட்ட ஒரு குழந்தை.
Donor conception - கொடையாக வழங்கப்பட்ட ஒரு விந்தணுவின் மூலம், அல்லது கருமுட்டையின் மூலம் அல்லது 5 அல்லது ஆறு நாட்கள் வளர்ச்சியடைந்த கருவின் மூலம் நிகழ்ந்த கருத்தரிப்பு.
Donar insemination - டோனரின் விந்தணுவை பயன்படுத்தி செயற்கை முறையில் கருத்தரித்தல்.
Ectopic Pregnancy - எக்ட்டோபிக் பிரேக்நன்சி - கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயில் நிகழும் கருக்கட்டல்.
Egg Collection - கரு முட்டை சேகரிப்பு.
Egg Donation - இயற்கையாக கருத்தரிக்க முடியாத ஒருவருக்கு, உதாரணமாக கரு முட்டை அதிகம் வளர்ச்சியடையாத ஒரு பெண்ணிற்கு தன்னுடைய கருமுட்டைகளை அவருடைய சிகிச்சைக்காக தானமாக வழங்குதல்.
Egg Freezing - கருமுட்டையை உறைய வைத்தல் - ஒரு பெண்ணின் கருமுட்டைகளை சேகரித்த பின் எதிர்கால சிகிச்சைகளுக்காக அதை உறைந்த நிலையில் பாதுகாத்து வைத்தல்.
Egg Sharing - ஏற்கெனவே தன்னுடைய சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை தன்னுடைய சிகிச்சை சாதகமாக முடிந்த பின் வேறு ஒருவருக்கு இலவசமாக அளித்தல்.
Embryo - 8 வாரம் வரை வளர்ச்சியடைந்த ஒரு கரு.
Embryo Donation - இயற்கையாக கருத்தரிக்க முடியாத ஒருவருக்கு ஏற்கெனவே தன்னுடைய சிகிச்சைக்காக இணைக்கப்பட்டு உறைந்த நிலையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கருவை கொடையாக அல்லது தனமாக வழங்குதல்.
Embryo Freezing - ஏற்கெனவே தன்னுடைய சிகிச்சைக்காக இணைக்கப்பட்ட கருவை எதிர்கால சிகிச்சைகளுக்காக
Embryologist - கருத்தரிப்பு சிகிச்சைக்கான ஆய்வுகளையும் சிகிச்சைகளையும் செய்யும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள். இவர்கள் கருமுட்டை சேகரிப்பு, அந்த செயல் முறை, ஆய்வு கூடத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைக்கும் படி முறை, கருக்கட்டப்பட்ட கருவை உறைய பண்ணும் செயல் முறை மற்றும் அதை உறைந்த நிலையில் பத்திரப்படுத்தும் செயல் முறை, அதை மறுபடியும் கருப்பை வாய்க்குள் செலுத்தும் செயல் முறை போன்ற சிகிச்சைகளில் ஈடுபடுவார்கள். மாத்திரமல்லாமல், சரியான, ஆரோக்கியமான ஒரு விந்தணுவை தெரிவு செய்வதும் இவர்களது மிக முக்கியமான செயல்பாடு ஆகும்.
Embryo Transfer - மனித உடலுக்கு புறம்பாக ஒரு ஆய்வகத்தில்/ சோதனை கூடத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் இணைத்து உருவாக்கிய கருவை மறுபடியும் கருப்பை வாய்க்குள் செலுத்தும் செயல் முறை.
Endometriosis - கருப்பைக்கு புறம்பே/வெளியே பலோப்பியன் குழாயில் அல்லது சூலங்கங்களில் வளரும் திசுக்கூட்டம்.
Fallopian tubes - சூலகங்களையும் கருப்பையையும் இணைக்கும் குழாய். இதிலே தான் கருக்கட்டல் நிகழ சாத்தியங்கள் அதிகம்.
Fertilisation - கருக்கட்டல்
Fertility - கருத்தரிக்கும் திறன்
Fertility Drugs - இயற்கையாக கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ள தம்பதியினருக்கு கருத்தரிப்புக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள்.
Fertility MOT - உங்களுடைய சூலகங்களை அவற்றின் கருமுட்டைகளை உருவாக்கும் திறனை இரண்டு ஹார்மோன்களை (FSH & AMH) ஒரு ரத்த பரிசோதனையின் மூலம் கண்டறியும் செயல்பாடு. இந்த பரிசோதனை ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரிக்கும் சாத்திய கூறுகளை அளவிடும் ஒரு சோதனையாகும்.
Fibroids - பைப்ரோய்ட் கட்டிகள் / கருப்பை நார்த்திசு கட்டிகள் - கருப்பையை சுற்றி வளரும் புற்றுநோய் அல்லாத கட்டிகள். இது மாறுபட்ட அளவில், மாறுபட்ட வடிவில் ஒன்று அல்லது கூட்டமாக காணப்படலாம்.
Follicle -
Follicle-stimulating hormone (FSH) -
Follicle tracking - கருமுட்டைகள் வளர்ச்சியை கண்டறிய செய்யப்படும் தொடர்ச்சியான ultrasound scans அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள்.
Genetics Testing - உங்களது அல்லது உங்கள் துணையின் ஜீன்களில் அதாவது மரபியலில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று கண்டறியவும் குழந்தைக்கு அந்த குறைபாடுகள் கடத்தப்படாதபடிக்கும் செய்யப்படும் ஒரு சோதனை.
Gonadotrophins - சூலகங்களை கருமுட்டைகளை அதிகமாக வளர பண்ணும்படி ஊசி மூலம் செலுத்தப்படும் ஹோர்மோன்கள், குறிப்பாக இவைகள் IVF சிகிச்சைக்கு முன்னர் பயன்படுத்தப்படும்.
அடுத்த பதிவில் மேலும் பல தகவல்களை பதிவிடுகிறேன்.
source




Comments