Implantation Bleeding என்றால் என்ன?

Early pregnancyயில் அதாவது ஆரம்ப கால கர்ப்ப நாட்களில் சில பெண்களுக்கு ஸ்பாட்டிங் (Spottin) என்றழைக்கப்படும், உதிரப்போக்கு இருக்கும். இது மாதவிடாய் அளவுக்கு இல்லாமல் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய மிகவும் குறைந்த அளவில் வெளிப்படும். சில பெண்களோ இதை குறித்து அதிக கவலைப்பட்டு மனசஞ்சலத்திற்கு ஆளாவார்கள், காரணம் நம் நாட்டில் அதைக்குறித்து போதிய அளவில் வெளிப்படையாக பேசாததும், கற்றுக்கொடுக்காததும். இன்று இந்த பதிவில் இம்பிளாண்ட்டேஷன் ப்ளீடிங் (Implantation bleeding) என்றல் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
ஒரு பெண்ணின் கருமுட்டையோடு (Egg) அல்லது சூலோடு ஆணின் விந்து (Sperm) இணையும் போது கருக்கட்டல் (Fertilization) நிகழ்கிறது. இது பலோப்பியன் குழாயில் (Fallopian tube) அல்லது கருப்பையில் (womb) நடக்கும்.அப்படி கருக்கட்டப்பட்ட சூலானது பலோப்பியன் குழாயின் மூலம் கருப்பைக்கு வந்து அங்கே கருப்பையின் சுவரில் தன்னை இணைத்து கொள்ளும். இந்த நிகழ்வே இம்பிளாண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு நிகழும், ஆனால் Pad அல்லது tampon வைக்கிற அளவுக்கு உதிரப்போக்கு இல்லாமல் panty லைனர் வைக்கிற அளவுக்கு சிறிதளவு மாத்திரமே இருக்கும். ஏறத்தாள ஓவிலேஷன் (ovulation) நடந்து 2 வாரங்களுக்குள் இந்த ஸ்பாட்டிங் நடைபெறும்.
(Video Source from google,2023)
இது மாதவிடாய் நாட்களிலேயே நிகழ்வதால் சிலர் இந்த இம்பிளாண்டேஷன் ப்ளீடிங்கையும் மாதவிடாயையும் குழப்பி கொள்வார்கள். நீங்கள் கர்ப்பம் தரித்து 7-14 நாட்களுக்கு உள்ளதாக இந்த இம்பிளாண்டேஷன் ப்ளீடிங் நிகழும்.
உலகின் 25%வீதமான பெண்களுக்கு இப்படி நடப்பது உண்டு என்று healthline வெப்சைட் தெரிவிக்கிறது.
உண்மையாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் டெஸ்ட் பண்ணி பார்ப்பதற்கு முன்னரே நீங்கள் கருவுற்றிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் முதல் அறிகுறி இதுதான் என வைத்தியர்கள் சொல்கிறார்கள்.
1ம் நாள் - மாதவிடாயின் முதல் நாள்
14ம் நாள் - ஓவிலேஷன் (ovulation) உங்கள் அடுத்த மாதவிடாய்க்கு 14 நாட்களுக்கு முன்னர் கருமுட்டை வெளிப்படும்.
14- 15ம் நாள் - உங்கள் கருமுட்டை 12-24 மணி நேரம் மாத்திரமே உயிரோடு இருக்கும் அதனால் fertilization எனப்படும் கருத்தரிப்பு உங்கள் கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிப்பட்ட 2 நாட்களுக்குள் நிகழ வேண்டும்.
20-24ம் நாள் - இந்த நாட்களளவில் தன இந்த இம்பிளாண்டேஷன் ப்ளீடிங் வர வாய்ப்புண்டு. அதாவது கருக்கட்டப்பட்ட 6-7 நாட்களில் நிகழலாம். இது ஒரு சில மணி நேரம் அல்லது ஓர்/இரண்டு நாட்கள் மாத்திரமே நிகழ வேண்டும்.
இந்த இம்பிளாண்டேஷன் ப்ளீடிங் நிகழும் போது இதன் அறிகுறிகள் எல்லாம் மாதவிடாயை போலவே இருக்கும்.
மாதவிடாய்க்கும் இம்பிளாண்டேஷன் ப்ளீடிங்குக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
மாதவிடாய் | இம்பிளாண்டேஷன் ப்ளீடிங் |
1 வாரம் நீடிக்கும் | 1 அல்லது இரண்டு நாட்கள் |
கனமாக ஆரம்பித்து குறைவாக முடியும் | மிக குறைந்த அளவு |
அதிக வயிற்றுவலி | லேசான வலி |
இதில் எந்த விதத்திலும் அதிக அளவு உதிரப்போக்கு இருக்க கூடாது. நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின் உங்களுக்கு உதிரப்போக்கு இருக்குமானால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
உறைந்த ரத்தமோ, அதிக ரத்தமோ, வலியோ எதுவாக இருப்பினும் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
Sources



Comments