top of page
Search

கர்ப்பம் தரிப்பதற்கான முதல் படி என்ன?

  • Oct 28, 2023
  • 4 min read

சிறுவயது முதலே பெண்குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மழலை மாற முன்னரே பெண் குழந்தைகள் மனதளவில் தாய்மையை எதிர்பார்க்க தொடங்கிவிடுவார்கள். இதன் பிரதிபலிப்பு தான் ஒரு பொம்மையை கொண்டாடுவது. பால் பருவம் மாற முன்னரே தன்னை ஒரு தாயாக பாவித்து அந்த பொம்மைக்கு பாலூட்டுவதும், சீராட்டுவதும், அதை தலைவாரி சிங்காரிப்பதும் யாரும் கற்றுக்கொடுக்காமலே ஒரு பெண் குழந்தையின் சிந்தனையிலேயே தோன்ற தொடங்கிவிடும். பருவமெய்திய உடன் கூட குழந்தைகளை அள்ளி அணைப்பதும், கொஞ்சி குலாவுவதும், தலையணையை வயிற்றில் வைத்து கர்ப்பிணியை போல கண்ணாடி முன்னின்று பாவனை செய்வதும் கூட அந்த பெண்களுக்குள் உள்ள தாய்மையை எதிர்நோக்கிய தேடல் தான், ஆண் பையன்களிடமோ வாலிபர்களிடமோ இதை நம்மால் பார்க்க முடியாது.

அப்படி சிறு வயது முதலே தனக்கே தனக்கான ஒரு பாப்பா, ஒரு செல்லம், ஒரு பொம்மையாக தனக்குரிய ஒன்றை சொந்தமாக சுமந்து பெறுவது பெண்களின் ஒரு கனவு தான். இந்த கனவுகளுக்கெல்லாம் உச்சாணி கொம்பில் இருப்பது திருமணம். இப்போது இது சற்றே அவரவர் தேவை கருதி, வசதி கருதி மாறுபட்ட கருத்துக்களுக்கு உட்பட்டிருந்தாலும் கூட, நம்முடைய கலாச்சாரத்தில் இன்னும் அதிகபட்சமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் என்பது தான் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள நமக்கு கிடைக்கும் முதல் அடையாளம்.


அப்படி நீங்கள் திருமணம் முடித்துவிட்டு குழந்தை பிறப்புக்கு தயாராய் இருந்தாலும், அல்லது லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருந்தாலும், அல்லது திருமணமே வேண்டாம் எனக்கு குழந்தை மாத்திரம் போதும் என்று டோனர் மூலம் கருத்தரிக்க விரும்பினாலும், பிள்ளை ஒன்றை பெற்றெடுக்க முன்னர் நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் செய்ய வேண்டிய சில செக் லிஸ்ட் தான் இது.


1. எதை செய்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்


இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே' ன்னு தோன்றினா, கரெக்ட் 'இது அதே தான்' ஆனா situation தான் வேற. ஒரு குழந்தையை இந்த பூமிக்கு கொண்டு வருவது லேசான காரியம் அல்ல, இந்த உலகத்தில் ஒரு மனிதனின் அனுமதியில்லாமல் அவனுடைய/அவளுடைய மிகப்பெரிய தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது ஒரு குழந்தையை இந்த பூமிக்கு நாம் கொண்டு வருவதிலேயே ஆரம்பிக்கிறது. மாத்திரமல்லாமல், அந்த பிள்ளையை நாம் வளர்கிற விதத்தில் தான் சமூகத்திற்கு நாம் எப்படிப்பட்ட சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்றும் தெரிகிறது. ஒரு பிள்ளையை பெற்று காடே மேடே என்று அலைய விடுவதற்கு நாம் ஒன்றும் மிருகங்கள் அல்லவே. நமக்கு தனி மனித ஒழுக்கங்களும் சமூக பொறுப்புக்களும் உண்டு. அதனால் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும், சமூகத்திற்கும் பொறுப்பாளி ஸ்தானத்தில் இருக்கிற நீங்கள் எடுக்கும் இந்த முடிவு மிகவும் தீர்க்கமானதாயும், நன்றாய் திட்டமிட்டதாயும் இருத்தல் அவசியம். அதனால் ஆழ அமர, நிதானமாய், நீங்களும் உங்கள் துணையும் கலந்தாலோசித்து, மனதளவிலும், உடலளவிலும், பொருளாதார ரீதியிலும் நீங்கள் இந்த ரெஸ்போன்சிபிலிட்டிக்கு ஆயத்தமா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து இந்த முடிவுக்கு வருதல் நலம். அல்லது குழைந்தை பிறப்புக்கு பின் 'போஸ்ட் பற்றும் பீரியட்ல்' (Postpatrum) இருக்கும் ஸ்ட்ரெஸ், மனஉளைச்சல், சோர்வு, பொருளாதார நெருக்கடி, நித்திரையின்மை எல்லாம் சேர்ந்து உங்களுக்கும் உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகப்பெரிய அழுத்தத்தை கொண்டு வந்து விடும். அதனால் planning is a first and important step.


2. வைத்தியரிடம் ஒரு விசிட்


நான் குழந்தை பிறப்புக்கு ஆயத்தமாகி ஒரு 7 வருடம் சென்ற பின்னர் தான் என் கணவர் வைத்தியரிடம் சென்றதாக எனக்கு ஞாபகம். சில நேரம் நாங்கள் உதாசீனப்படுத்தி விடும் சில silly அதாவது முட்டாள்தனமான காரியங்கள் தான் நம்மை அநேக ஏமாற்றங்கள் அல்லது வேதனைகளுக்கு நேராக அல்லது நேர விரயங்களுக்கு நேராக நம்மை நடத்தி விடும். முளையிலேயே கிள்ளி எரிய வேண்டிய நிலையில் இருக்கும் காரியங்களை இலகுவாய் அகற்றுவது நெடுநாட்கள் நாம் காத்திருப்பதை தடுத்து விடுகிறது. ஆரம்ப கால பிகாஸ், ஆரம்ப கால தைராய்டு, ஸ்பெர்ம் மொட்டிலிட்டி, எண்டோமேற்றிஸ் இப்படி குழந்தை பிறப்பை தாமதப்படுத்தும் அநேக காரணிகள் உண்டு, மாத்திரமல்லாமல், உங்களுக்கு ஏதும் பாலியல் நோய்கள் (sexually transmitting disease) இருக்கிறதா என்று அறிந்து கொள்வதும் கூட மிகவும் அவசியமான ஒன்று.அதனால் ஒரு சின்ன வைத்திய பரிசோதனையும், இரத்த பரிசோதனையும் நமக்கு இருக்கும் underlying health issuesஐ நமக்கு அடையாளம் காட்டி விடும். மாத்திரமல்லாமல் இப்போது மிக சாதாரணமாகிவிட்ட நீரிழிவு நோய் (type 2 diabetis ) இரத்த அழுத்தம் ( high blood pressure ) கொலெஸ்ட்ரோல், ஜெனெரேஷனல் நோய்களை நாம் அறிந்து அவற்றை கட்டுப்படுத்துவது குழந்தை பிறப்பிற்கு முன்னர் மிகவும் அவசியமான ஒன்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதும் ஆகும்.


ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்


எனக்கு தெரிந்த ஒரு நண்பி, சிறு முதலே ஜெனரேஷனல் டயாபடீஸினால் அவதியுற்ற ஒருத்தி, குழந்தை பிறப்புக்கு ஆயத்தமான பொது வைத்தியர்கள் சொன்ன முதல் காரியம் அவளின் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தும்படி. குழந்தை பிறப்பென்பது தாய்க்கும் சேய்க்கும் அவர்கள் இருவரின் உடல் நலத்திற்கும் பாதிப்பு விளைவிக்கிற ஒன்று, அதனால் இருவருக்கும் ஏதாகிலும் ஒரு குறைபாடோ அல்லது ஆபத்துகளோ நேரிடாதபடி அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு வைத்தியர்களின் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் உங்கள் இருவரில் (கணவன்+மனைவி) இருக்கும் அடிப்படையான சில காரியங்களை கட்டுப்படுத்த சொல்வார்கள். அல்லது அதற்கு தேவையான சிகிச்சைகளை பரிந்துரைப்பார்கள்.

உதாரணமாக தைராய்டு ஒரு பெண்ணற்கு இருக்குமானால் அவளால் கர்ப்பம் தரிக்க முடியாது, அப்படி தரித்தாலும், கருச்சிதைவு, குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே குழந்தை பிறத்தல் என்று அதை சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும், அதனால் மருத்துவர்கள் முதலாவது தைராய்டு குறைபாட்டை போக்க அறிவுறுத்துவார்கள்.

உடல் எடை குறைப்பு

புகைபிடித்தல் மற்றும் மது தவிர்த்தல்

நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல் அருகே வேலை பார்ப்பவராய் இருந்தால் அவற்றை தவிர்த்தல்/மாற்றல்

குடும்பத்தில் பிரச்னை அமைதியின்மை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்தல்.



விட்டமின்கள் மற்றும் Suppliments


குழந்தை பிறப்பை திட்டமிட்ட நாளிலிருந்து தினமும் 400 மைக்ரோகிராம் (400mg) போலிக் ஆசிட் (folic acid) நீங்கள் எடுக்கும் படி வைத்தியர்கள் அறிவுறுத்துவார்கள். இதை நீங்கள் வைத்திய ஆலோசனை இல்லாமலே சாதாரண மருந்து கடைகளிலும் இங்கிலாந்தில் அனேகமாக எல்லா கடைகளிலும் வாங்க முடியும். (over the counter medicine)

போலிக் ஆசிட் குழந்தை பிறப்பில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், முதல் மூன்று மாத கருவின் வளர்ச்சியில், அதன் மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய அவயவங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. (birth defects)

மாத்திரமல்லாமல் வைட்டமின் டி மற்றும் வைத்திய ஆலோசனையின் பேரில் குழந்தை பிறப்பு விட்டமின்கள் போன்றவற்றையும் நீங்கள் எடுக்க முடியும்.


சரியான ஆரோக்கியமான உடல் எடையை பேணல்


அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பில் சிக்கல்கள் உண்டென்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதய வியாதி, நீரிழிவு, கொலெஸ்டெரோல் போன்றவையும், உடல் எடை மிகவும் குறைந்த நிலையில் இருப்பவர்கள் வேறு சில உபாதைகளோடு பெலவீனமாகவும் இருப்பார்கள் என அவர்கள் கருதுகின்றனர்.

சீக்கிரமாகவும், ஆரோக்கியமாகவும் உடல் எடையை பேண நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உணவு பழக்கவழக்கங்களை சரி செய்வதும், அளவான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் ஆகும். உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கார்போவைதரேட் குறைவாய் உள்ள உணவுகள், அதிக எண்ணெயில்லாத உணவுகள், 2-3 லீட்டர் நீர், தானியங்களும் பருப்புகளும் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளல் போன்றவை அவசியம். அதோடு துரித உணவுகளை தவிர்த்தல், மதுபானம் தவிர்த்தல், processed food, ஹை கார்ப், ஹை சுகர் போன்றவற்றை தவிர்த்தலும் அவசியம்.



மெண்டல் ஹெல்த்


இது இங்கே இங்கிலாந்தில் மிகவும் பெரிதாய் பார்க்கப்படுகிற ஒன்று, நம்முடைய மனநிலை நம்முடைய குழந்தையை அது கர்ப்பத்தில் இருந்தாலும், அல்லது பிறந்தாலும் பாதிக்கும் காரணிகளில் ஒன்று. அதனால் உடல் நலத்தை போலவே மன நலத்திலும் நாங்கள் அக்கறை கொள்வது மிகவும் அவசியமாகும். உங்கள் மனதை கவலை இல்லாமல், பயம் இல்லாமல், மன மகிழ்ச்சியோடு நீங்கள் வைத்திருக்கும் போது உங்கள் உடல் தானாகவே அதற்குரிய செயல்களில் சரியான விதத்தில் இசைந்து கொடுக்க ஆரம்பிக்கும். சில நேரங்களில் உங்கள் குடும்ப சூழ்நிலை, உங்கள் வேலை, உங்கள் உடல் நலம் மற்றும் சில பல காரணிகளால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு மனா உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் மனநல ஆலோசகரிடமோ அல்லது நீங்கள் நம்ப தகுந்த நண்பர் அல்லது உறவினரிடமோ உங்கள் குடும்பத்தினரிடமோ கலந்து ஆலோசிப்பது மிகவும் நல்லது.




Sources


 
 
 

Recent Posts

See All
Glossary - பொதுவான பதங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு...

 
 
 

Comments


Screen Shot 2023-10-26 at 13.20.43.png

Hi, thanks for stopping by!

I know how isolating and overwhelming infertility can be; that's why I'm passionate about sharing my story and using my experience to help others. At Grow with Rosh, I offer a variety of resources designed to support women on their journey to better health. From informative blogs to mentorship opportunities, I aim to create an environment where women can feel heard, empowered, and supported. Together, we can work towards a healthier, happier future.

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page