How Important is your Mental Health
- Oct 20, 2023
- 3 min read
Updated: Oct 26, 2023

ஏதாவது ஒரு social awareness கிரியேட் பண்ற மாதிரி ஒரு போஸ்ட் போடனும்னு ரொம்ப நாளா ஒரு ஐடியா இருந்துச்சு. இப்ப தான் அதை execute பண்ண காலநேரம் கூடி வந்திருக்கு.
சமீப காலமா நாங்க அடிக்கடிகேட்கிற ஒரு பதம் mental health awareness. இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவென்றாலும் பெண்களுக்கு சில பல காரணங்களுக்காக இதை பற்றி வெளிப்படையாக பேச தயக்கமுண்டு அதுவும் ஆசிய நாடுகளை சேர்ந்த அதாவது இந்திய, இலங்கை பெண்களுக்கு இது ஒரு taboo. ஏனென்றால் இப்படி என்று கோடு காட்டினாலே ஏதோ பைத்தியக்கார பிச்சியைப்போல நம்மாக்கள் தான் சித்திரித்து விடுவார்களே..
ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டு பெண்களாகிய நாம் இதை குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் மிகவும் அவசியம். இந்நாட்களிலே பெண்கள் வீட்டை கவனிப்பதுடன் கூடிய வெளி வேலைகளையும் மற்றும் வேலைக்கும் போய் ஆண் தான் bread winner என்கிற stereotyping ஐ உடைத்து நானும் குடும்பத்தை நடத்த முதலீட்டுகிறேன் என்று கணவனுக்கு தோள் கொடுப்பதிலாகட்டும் அல்லது வீட்டையும் கவனித்து, பிள்ளைகளையும் கவனித்து, வேலைக்கும் போகும் single mother ஆக இருப்பதிலாகட்டும் ஆணுடன் போட்டி போட்டுக்கொண்டு மேன்மையான ஸ்தானங்களை வகிப்பதிலாகட்டும் மிளிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் என்ன தான் top lady ஆக இருந்தாலும் சில நேரங்களில் நம்முடைய பெண்மைக்கே உரித்தான சில ஹோர்மோன்கள் நமக்குள்ளே இருந்து கொண்டு silly thingsற்கு நம்மையே depressed ஆக feel பண்ண வைக்கும்.
Depression is not healthy
Depression is not right
You need to stand against it.
பிரச்சனை இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை, எல்லாருக்கும் ஏதாவது பிரச்சனை உண்டு, சோகம் உண்டு, குறை உண்டு, நேசித்தவர்களை இழந்த துக்கம் உண்டு, பொருளாதார நெருக்கடி உண்டு, தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தினரின் ஆரோக்கியம் குறித்த பயம் உண்டு.
விஷசமாக இந்த நாட்களில் ஒரு uncertainty உண்டு. எல்லாருக்கும் இதில் ஏதாவது ஒன்றாகிலும் உண்டு. சிலர் இதிலேயே உழன்று உழன்று தங்கள் வாழ்நாட்களை நரகமாக்கி கொள்கின்றனர்.
உங்களுடைய குறை அல்லது உங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் காரியம், எதிர்காலத்தை குறித்த பயம், உங்களுடைய இயலாமை உங்களை define பண்ண முடியாது.
You are fearfully and wonderfully created.
You are stronger than whatever you are facing.
அநேகமான winter இரவுகளில் நாம் drive பண்ணுகிற போது மூடுபனி பாதையை மூடியிருந்த அனுபவம் நமக்கு இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கின்ற போது விபரிக்க இயலாத, அந்தப்பக்கம் என்ன இருக்கிறதென்று தெரியாத அந்த நிலை அந்த exact point ற்கு வரும் போது காற்றாக கரைந்து விடுவதை கண்டிருக்கிறோம்.
அதுபோல தான் வாழ்க்கையும்,
எல்லாருக்கும் நிச்சயமல்லா தன்மை உண்டு
எல்லாருக்கும் பயமுண்டு. ஆனால் கிட்ட வந்த பார்க்கும் போது அடச்சீ! இதுக்கு தான் இவ்வளவு சீனா’ என்ற மாதிரி இருக்கும்.
இயல்பாகவே எங்களுடைய gene ற்குள் போராட்ட குணம் உண்டு, அது எங்களை பெலப்படுதிக்கொண்டே இருக்கும். என்னுடைய அம்மா ஒரு strong lady என்று சின்ன வயதிலிருந்தே நான் கண்டு வியந்ததுண்டு அதற்கு காரணம் அவர் அனுபவித்த போராட்டங்களும் அவருடைய மனவலிமையும். என்னுடைய அம்மா மட்டுமல்ல உங்க வீட்டுல இருக்க உங்களோட அம்மா, பாட்டி, அத்தை, சித்தி இவங்கள்ள யாரோடையாவது நீங்க இதை connect பண்ணலாம். ஆனா இந்த காலத்தில அவ்வளவு வீக்கா நாங்க? சின்ன விஷயத்துக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் ஆகிகிட்டு.. ஆனா பேரு மட்டும் பெத்த பேரு ‘நாங்க படிச்ச ஜெனரேஷன்.
உங்களுக்கு stress வரக்கூடாதென்றோ அல்லது depression வராதென்றோ நான் சொல்லவில்லை, அது வரும் ஆனால் அதை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்
சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவியுங்கள்.
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.
பாடல் கேளுங்கள்.
பாட்டு போட்டு ஆடுங்கள்.
விரும்பியதை சமைத்து பழகுங்கள், bake பண்ணுங்கள்.
Embroidery செய்யுங்கள் - அது ஒரு stress buster. அந்த காலத்து பெண்களில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு தையல் தெரியும், knitting தெரியும், அவர்கள் தானே பாரதி கண்ட புதுமைப்பெண்கள்??
Gardening செய்யுங்கள்.
புத்தகம் வாசியுங்கள், நிறைய வாசியுங்கள், தேடி வாசியுங்கள்
உங்கள் நண்பர்களோடு நேரம் செலவிடுங்கள்
உங்கள் கணவரோடு மனம்விட்டு பேசுங்கள்
பிள்ளைகளோடு விளையாடுங்கள்
ஆன்மீகவாதியா? மனமார கடவுளை கும்பிடுங்கள்- எதிர்காலத்தை குறித்து நம்பிக்கையாயிருங்கள்.
கணவரோடு அமர்ந்து விருப்பு வெறுப்புக்களை பற்றி உரையாடுங்கள்.
கலவி பற்றி உரையாடுங்கள்.
வீட்டு பொறுப்பு பற்றி உரையாடுங்கள்.
பணப்பரிமாற்றம், கடன், நிதிநிலமை, சேமிப்பு, பற்றி கலந்துரையாடுங்கள்.
பட்ஜெட் போடுங்கள்.
சேமிக்க பழகுங்கள் அநேக மன உழைச்சலுக்கு காரணம் சரியான பணதிட்டமிடல் இன்மையும் கணவன் மனைவி வெளிப்படையான உரையாடல் இன்மையுமாகும்.
பிள்ளைகள் பிறந்த பிறகும் கூட உங்களை பற்றி சிந்தியுங்கள்.
உங்களுடைய சரீரத்தை கவனியுங்கள்
ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்.
கணவன் வேலை முடிந்து வருமுன் குளித்து உடை மாற்றி fresh ஆக இருங்கள்.
படுக்க போகுமுன் குளித்து சுகந்த வாசனையோடு படுக்கையறைக்கு போங்கள்.
அது உங்கள் கணவரை impress செய்வதற்கு மட்டுமல்ல சில நாட்களுக்கு பின் நீங்களே உங்களை குறித்து feel good ஆக feel பண்ண ஆரம்பிப்பீர்கள்.
மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே மற்றவர்களை நீங்கள் நடத்துங்கள்.
கூடுமாலானவரை எல்லாரோடும் சுமுகமாக பழகுங்கள்.
அறம் செய விரும்புங்கள்.
எண்ணங்களை உயர்திக்கொள்ளுங்கள்.
சினிமா, சீரீயல் பார்ப்பதோடு அரசியலையும் அறிவியலையும் கூட அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு தாமதமாயும் இருக்க பாருங்கள்.
எல்லா மனுஷரோடும் Kind ஆக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்களோடு உங்களை compare பண்ணாதீர்கள், ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது “ ரோஜாவை மல்லிகையோடு அல்ல, ரோஜாவை ரோஜாவோடு கூட ஒப்பிடாதீர்கள்; எந்த பூவுக்கும் தனித்துவம் உண்டு, இனப்பெருக்க உறுப்பு எறும்புக்கும் உண்டு” உங்களுக்கு உங்களை குறித்த நம்பிக்கை அவசியம்.
If putting lipstick make you feel better go ahead,
If dressing up make you feel better go ahead,
If spending time with your loving one make you feel better go ahead,
If reading make you feel better go ahead.

இல்லாட்டி என்னை மாதிரி வெட்டியா இருந்தா தோடு போட்டு போட்டு கலட்டி பாருங்க
You know what makes you feel good.
உங்களுக்கு mentally support தேவைப்படும் போது, அதை கேட்கவோ அதை பற்றி பேசவோ தயங்காதீர்கள்.
#mentalhealthawareness among #tamil people



Comments