top of page
Search

I am pressed but not crushed..

  • Oct 20, 2023
  • 2 min read

Updated: Oct 26, 2023





வேலையிடத்தில் என்னுடைய மேலாளர் ஒரு இம்சை. ச்சை! உனக்கெல்லாம் வந்து ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டி இருக்கே என்று எப்போதும் நினைக்க தோன்றும். நேற்று already காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்தது. ஆங்கிலத்தில் ‘feeling blue’ என்று சொல்வோம், அந்த மனநிலையில் இந்த இம்சையும் ரொம்பவும் டூமச்சாக போய்விட ‘இந்த வேலையை விட்டுவிட்டால் என்ன?’ என்று மனதில் தோன்ற தொடங்கியது. மதியம் ஒரு நாலு மணி் வரை நாளே நாசமாய் போன மாதிரியே இருந்தது.


நீங்க அந்த blue’ mood ல் இருக்கும் போது சம்பந்தா சம்பந்தம் இல்லாத யோசனைகள் உங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்போ திடீரென்று எனக்கு தெரிந்த ஒருவரை பற்றிய நினைவு வந்தது.

அழகான ஒரு சகோதரி; ஒரு இருபது வருஷகாலமாக அவரை எனக்கு தெரியும். நல்ல நீளமான கருங்கூந்தல் நடக்கும் போது பாதம் வரை நீண்டு அசைந்தாடும். அந்த நாட்களிலேயே அதாவது 90’ஸ் கிட்ஸ் காலத்தில் குஷ்புவும், சுகன்யாவும், ரஞ்சிதாவுமான ப்ளஸ் சைஸ் ஹீரோயினிகள் கோலிவூட்டை கலக்கிக்கொண்டிருந்தபோது, மெல்லிடையும் அழகிய மேனியுமாக இருந்த ஒரு இளம்பெண்.

90களின் வழக்கத்தின்படி மேற்படிப்புக்கள் முடிந்தவுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வேலைக்கு போகுமிடத்தில் as usual இந்த பாழாய்ப்போன காதல் வந்துவிட ‘காதல் ஒருவனை கைப்பிடித்தே’ என்று பத்து வருஷமாக காதலித்தவரையே திருமணமும் செய்துகொண்டார்.


திருமணத்தின் பின்னான அவரது வாழ்க்கை இப்போதும் அடிக்கடி எனது சிந்தனையில் வந்துவிட்டுபோகும். அந்நாட்களின் வழக்கத்தின்படி திருமணமானவுடனே வேலையை விட்டுவிட்டார், ஒன்பதாம் மாதத்திலே முதல் குழந்தை, பின்னர் அடுத்தது. தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அந்த பிள்ளைகளோடேயே பிணைத்துக்கொண்டார். தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது, சுயமாக ஒரு பேங்குக்கு போக இயலாது.

அன்றைக்கு அவ்வளவு ஸ்மார்ட் ஆக இருந்தவர் இன்றைக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன் யூஸ் பண்ண தன் பிள்ளைகளை சார்ந்திருக்கிறார்.

அது ஒன்றும் அவரது பிள்ளைகளிடத்திலும், கணவனிடத்திலும் அவருக்கு பாசத்தை பெற்றுத்தரவில்லை மாறாக, சோம்பேறி! அம்மாவுக்கு ஒன்னும் தெரியாது என்று தான் யாருக்காக தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தாரோ அவர்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்ட நிலை.


வயது ஐம்பது கூட ஆகவில்லை அழகெல்லாம் உலர்ந்து, நீண்ட கருங்கூந்தல் கைப்பிடியாய் உதிர்ந்து, ஒளிவீசிய கண்கள் குழிவிழுந்து, வீணான வியாதியெல்லாம் வந்து ஒழுங்காக தன்னை அலங்கரித்து கொள்ளக்கூட தோன்றாமல் ஏனோதானோவென்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பகீரென்று ஆனது எனக்கு! வேலைக்கு போகமல் ‘ஹவுஸ் வைப்பாக இருப்பது ராஜவாழ்க்கை என்று நினைத்து கொள்பவர்களுக்கு- இல்லை! இன்றிலிருந்து

ஒரு பத்து வருஷங்களுக்கு பின் உங்கள் வாழ்க்கையை பின்னிட்டுப்பார்த்தால் தெரியும் நீங்கள் எவ்வளவு உங்கள் சுயகௌரவத்தை, தனித்துவத்தை, பேச்சுரிமையை,confidenceஐ, உங்கள் சம உரிமையை இழந்து விட்டீர்கள் என்று.


இன்னொருவர் கூட நினைவுக்கு வந்தார்- அவர் என்னுடைய Boss. வயது 45-50 இடையிலிருக்கும். ஒரு கிரேக்க- லெபனொனிய - ஆங்கில பெண். தன்னுடைய 40வது வயதில் முதல் குழந்தையையும் 45வது வயதில் இரண்டாம் குழந்தையையும் IVF ன் மூலம் பெற்று, 8 attempts, 4 failures, 2 கருச்சிதைவுகளினூடாக பயணித்தவர்.

இவருக்கு கீழ் 6 ஆண் முகாமையாளர்கள், நானுட்பட 5 பெண் முகாமையாளர்கள். 400 பணியாளர்கள், வாரத்துக்கு 8-9 லட்சம் பவுண்டுகள் டர்ன்ஓவர் செய்யும் கிளை.

எத்தனை தடைகளை தாண்டி வந்திருப்பார் இந்தப்பெண்,

எத்தனை சாடிஸ்ட் மேலாளர்களை பார்த்திருப்பார்,

எத்தனை உடனூழியர்கள் இவருக்கு குழிவெட்டியிருப்பார்கள்

எத்தனை பர்சனல் பிரச்சனைகள் இவருக்கு இருந்திருக்கும்.


அடச்சீ! எந்திரி! போய் குளிச்சு, fresh ஆகி, மேக்கப் போட்டு போய் பொளப்ப பாரு! வெட்டியா இருந்த இந்த ஒரு நாளுக்கே எத்தனைய யோசிக்க தோணுதுனு எழும்பி என்னை நானே திடப்படுத்திக்கொண்டேன்.


Keep saying!

 நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.


I am pressed but not crushed, persecuted not abandon; struck down but not destroyed.

2 Cor 4:8-9

Not to judge any working non working women- you all are unique individuals in your own ways.  

You have created fearfully and wonderfully

Stay Strong - you got this


 
 
 

Recent Posts

See All
Glossary - பொதுவான பதங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு...

 
 
 

Comments


Screen Shot 2023-10-26 at 13.20.43.png

Hi, thanks for stopping by!

I know how isolating and overwhelming infertility can be; that's why I'm passionate about sharing my story and using my experience to help others. At Grow with Rosh, I offer a variety of resources designed to support women on their journey to better health. From informative blogs to mentorship opportunities, I aim to create an environment where women can feel heard, empowered, and supported. Together, we can work towards a healthier, happier future.

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page