top of page
Search

It's time to break some Traditions

  • Oct 20, 2023
  • 1 min read

Updated: Oct 26, 2023




சமீபத்தில் பத்மாவத் திரைப்படம் பார்த்தேன். நான் ஒரு வரலாற்று பைத்தியம், எந்த ஒரு வரலாறு சார்ந்த இலக்கியமோ, சரித்திரமோ, புதினமோ, திரைப்படமோ நான் பார்த்துவிடுவேன், அது எவ்வளவு பழசானாலும்.

சரி விசயத்துக்கு வருவோம். படம் என்னமோ நல்ல படம் தான், கலையும், அழகும், நடிப்பும், கமெரா கோணங்களும், மொழியும், ஆடை ஆபரணங்களும் அற்புதம் தான். நிச்சயமாக நம்மை 1300 வருடங்களுக்கு முன் கடத்தி சென்று அந்த சித்தூரிலேயே வாழ்ந்த ஒரு உணர்வை நமக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் அபத்தம் என்னவென்றால், ராஜபுத்திர மானம் காக்க அத்தனை பெண்களுமே ‘ஜோஹார்’ என்றழைக்கப்படும் சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற ‘மாஸ் சூசைட்’ செய்து கொள்வதை அவ்வளவு புனிதமாக glorious ஆக காண்பிப்பது தான்.


கடந்த ஒரு நூற்றாண்டில் தான் கொஞ்சம் கொஞ்சம், ஜாக்கெட் போடுதல், செருப்பு போடுதல், பால்ய விவாக தடை, கொஞ்சமே கொஞ்சமாக ஜாதி மறுப்பு கொள்கைகளில் தீவிரம், கொஞ்சம் பகுத்தறிவு, கொஞ்சம் தார்மீகம், ஆண்டான் அடிமை ஒழிப்பு, சமத்துவம், domestic violence மீது சட்டங்கள், வரதட்சனை ஒழிப்பு இப்படி சில நன்மைக்கேதுவான மாற்றங்கள் தலைதூக்கி இருக்கின்றன. இந்த காலத்தில் இப்படிப்பட்ட படங்களை ரொமாண்டிசைஸ் செய்வதும் ஆஹா அற்புதம் என்று சிலாகித்து பேசுவதும், பத்மாவதியை கற்பில் சிறந்த பத்தினி தெய்வம் என்று கொண்டாடுவதும் மறுபடியும் பெண்கள் மீது இந்த மடத்தனத்தை லைட்டாக திணிக்க முயற்சிப்பது தான்.


என்னை கேட்டால் சித்தூர் ராணி பத்மினியை விட, குயிலி சிறந்தவர் என்று சொல்லுவேன். At least அவருடைய மரணத்தில் ஒரு அர்த்தம் இருந்தது. பத்மாவதி அத்தனை பேரோடு தன்னை எரித்து கொண்டதை காட்டிலும், அலாவுதீன் கில்ஜியின் படைகளோடு போருக்கு சென்று வீரமரணம் அடைந்திருந்தால் உத்தமம்.

Anyways, நிஜத்தில் கொண்டாடவும், கோயில் கட்டவும் இது உண்மை சம்பவம் அல்ல.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சரித்திர நாயகன் தான்.

மோவார் ராஜா ராவல் ரத்தன் சிங் சரித்திரத்தில் வாழ்ந்தவர் தான்.

சித்தூர் கோட்டையும் சரித்திரம் தான்.

ஆனால் ராணி பத்மாவதி மாத்திரம் ஒரு கற்பனை கதாபாத்திரம். ஆம், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி கவிஞர் மாலிக் முஹமட்டின் பத்மாவத் என்ற கவிதையில் அவருடைய கற்பனையில் உதித்தவள் தான் பத்மாவதி.

அட போங்கயா கற்பனை கதாபாத்திரத்துக்கா கோவில் கட்டி பத்தினி தெய்வமின்னு கொண்டாடுறீங்க!


Just my மனக்குமுறல்.

 
 
 

Recent Posts

See All
Glossary - பொதுவான பதங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு...

 
 
 

Comments


Screen Shot 2023-10-26 at 13.20.43.png

Hi, thanks for stopping by!

I know how isolating and overwhelming infertility can be; that's why I'm passionate about sharing my story and using my experience to help others. At Grow with Rosh, I offer a variety of resources designed to support women on their journey to better health. From informative blogs to mentorship opportunities, I aim to create an environment where women can feel heard, empowered, and supported. Together, we can work towards a healthier, happier future.

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page