top of page
Search

Social Mediaல் உள்ள ஆண் நண்பர்களுக்கு,

  • Oct 20, 2023
  • 3 min read

Updated: Oct 26, 2023



உங்களில் அநேகர் இப்போழுது திருமணமாகி இருப்பீர்கள், சிலருக்கு குழந்தைகள் இருக்கலாம். சிலர் இன்னும் முரட்டு சிங்கிளாக கூட இருக்க வாய்ப்புண்டு. ஆனால் உங்களில் எத்தனை பேர் பெண்களை பற்றி, அவர்களின் உடல் மாற்றங்களை பற்றி அறிந்திருக்கிறீர்கள் அல்லது அறிந்து கொள்ள முனைகிறீர்கள் என்பது சந்தேகத்திற்கிடமானது.


உங்கள் தாயார், சகோதரி, காதலி, மனைவி, பெண் தோழிகள் போன்ற இத்தனை விதமான பாத்திரங்களோடு அனுதினமும் நீங்கள் பழகினாலும் கூட அவர்களில் எத்தனை பேர் வெளிப்படையாக இப்படிப்பட்ட உறையாடல்களை உங்களோடு நிகழ்தியிருப்பர்கள் என்பது கேள்விக்குறிதான்.

ஏனென்றால் நம்முடைய கலாச்சாரத்தில் இது ஒரு பேசாப்பொருள் அதாவது ‘Taboo’

சங்கடமான ஒரு விடயம் தான், ஆனால் அது உங்களுக்கு தெரியப்படுத்துவதில் தப்பில்லை என்பது என்னுடைய கருத்து. நாம modern generation அல்லவா?


PMS அல்லது periods அல்லது menstruation அல்லது மாதவிடாய் இந்த வார்த்தைகளை உங்களில் அநேகர், அநேகரென்ன அத்தனை பேரும் உங்கள் வாழ்கையில் atleast ஒரு முறையாவது கேட்டிருப்பீர்கள். 8-11 ம் வகுப்பில் இனப்பெருக்கம் என்று ஒரு பாடம் படித்த ஞாபகம் கூட உண்டு. ஆனால் நம்முடைய காலாச்சார பிண்ணணியில் அதை மேலோட்டமாக தாமரை இலை தண்ணீர் போல நமக்கு சொல்லிக்கொடுத்திருப்பார்கள்.

உங்களுக்கும் பதின் வயதில் அதைகுறித்து இருந்த ஆர்வமும் சுவாரசியமும் போகப்போக குறைந்து ‘பீரியட்ஸா? அதான் தெரியுமே, மாதம் மூணு நாள் ப்ளீட் பண்ணும் அதானே’என்ற நிலைக்கு வந்திருப்பீர்கள்.


ஆனால் அந்த பீரியட்ஸ் ஓவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் வாகு, அவர்களது ஜீன்ஸ், அவர்களின் குடும்ப பிண்ணணி போன்ற பல காரணிகளின் நிமித்தம் வேறுபடும். சிலருக்கு ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தாலும் திருமணத்தின் பின்னால் ஏற்படும் உடலியல் மாற்றங்களின் காரணமாக திருமணத்திற்கு பின்னாக கூட அவர்களது வழமை மாறாலாம்.

சிலருக்கு இது வரப்பிரசாதம் தான் சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை டான் என்று 3 நாட்கள் எந்த வித உபாதைகளும் இல்லாமல் வருவதும் போவதும் தெரியாமல் இருக்கும் இப்படிப்பட்டவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள் தான். ஏனெனில் அவர்களது நடைமுறை வாழ்க்கையில் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஆனால் சிலருக்கு இது ஒரு விபரிக்க முடியா உபத்திரவம்.


1 irregular periods - மாறுபட்ட சுழற்சி - இதனால் ப்ரியட்ஸ் எப்போ வரும் என்று தெரியாத பதட்ட நிலையிலே இவர்கள் எப்போதும் இருக்க வேண்டியிருக்கும். பையில் எப்போதும் சானிட்டரி pads கொண்டு போக வேண்டி இருக்கும், ஒரு காரியத்தை plan பண்ண முடியாது. ஒரு trip organise பண்ண யோசனையாக இருக்கும். குழந்தை பேறு plan பண்ண முடியாது. இது இவர்களுடைய சமநிலையை பாதித்து கொண்டே இருக்கும்.


2 endometriosis - fibroids - PCOS - PCOD

இப்படிப்பட்ட conditions உடையவர்களுக்கு வரும் பீரியட்ஸ். உண்மையில் இவர்கள் பரிதாபமான நிலையில் இருப்பவர்கள்.

அதிக உதிரப்போக்கு- சிலருக்கு ஒரு வாரம், சிலருக்கு ரெண்டு வாரம். இரண்டு வாரங்கள் உங்கள் உடலிலிருந்து உதிரப்போக்கு நிகழ்ந்தால் உடல் பெலவீனமடைந்து உங்களால் உங்கள் சாதாரண வேலைகளை கூட செய்ய இயலாத சோர்வுக்குள்ளாக்கப்படுவீர்கள். படுக்கையில் இருந்து எழுவதற்கு கூட பெலனிருக்காது. பல்துளக்கி முகம் கழுவ திராணியிருக்காது. உடல் வலி, கால் வலி, தலை வலி, வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கள் இன்னும் எத்தனை வலிகளை கூட add பண்ணலாம். இந்த வலிகள் சாதரமான வலி அல்ல இவைகள் விபரிக்க முடியாத வேதனை.


சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, செமியாக்கோளாறு, வயிறு உப்புசமாக தோன்றுதல், நித்திரை இன்மை இப்படிப்பட்ட உபாதைகளும் உண்டு ( yes for the whole week)

சிலருக்கு இரத்த அழுத்தம் இந்த நாட்களில் அதிகமாகும், சிலருக்கு ஹோர்மோனல் இன்பாலன்ஸ் அதாவது சுரப்பிகளில் சமநிலை மாறுபடும் இதனால் மூட் சுவின்ங்க்ஸ் என்கிற சட்டென்று அழும், காரணமின்றி கோபப்படும், காரணமின்றி எரிச்சலடையும் படி தோன்றும். சிலருக்கு பசிக்காது சிலருக்கு பசித்து கொண்டே இருக்கும்.


ப்ளீடிங் என்பது உங்களுக்கு ஒரு காயமான போது இரத்தம் வருவது போன்றல்ல, அது மிகவும் வலி நிறைந்த, சங்கடமான, அநேக உணர்வுகளுக்குள் ஒரு பெண்ணை ஆழ்த்துகிற ஒரு நிலை. இவற்றோடு வாழத்தான் ஒரு பெண் பழகியிருக்கிறாள். இவற்றோடு தான் இருபது, முப்பது வருடங்கள் சமையல் செய்து, பிரயாணம் பண்ணி, கணவனை பராமரித்து, பிள்ளைகளை பராமரித்து, வீடு சுத்தம் செய்து, துணி துவைத்து, காயவைத்து, அயர்ன் பண்ணி, வேலைக்கு போய், ப்ளான் பண்ணி, ஓர்கனைஸ் பண்ணி, தன்னுடைய எல்லா வேலைகளையும் நடத்திக்கொண்டு வருகிறாள்.


அந்த பெண்ணுடைய தலைமுடி கீழே கிடந்தால் அதை எடுத்து போடுவதில் நீங்கள் குறைந்து போக மாட்டீர்கள்.

கால் பிடித்து விடுவதில் உங்கள் ஆண்மை அற்றுப்போய்விடாது.

ஒரு நாள் நீங்கள் வீடு சுத்தம் செய்தால் வானம் இடிந்து கீழே விழாது.

தேநீரில் சக்கரை குறைந்தாலோ, தோசையில் உப்பு கூடினாலோ பகல் இரவாகவும் இரவு பகலாகவும் மாறாது.

ஒரு பெண் தன்னையும் கவனித்து, தன் குடும்பத்தையும் கவனிக்கும் அற்புத தன்மை கொண்டவள். தன்னுடைய வேதனையை அவள் பெரிதுபடுத்துவதில்லை. அப்படிப்பட்ட பெண்களை பற்றிய ஒரு குட்டி அப்டேட் தான் இது.


நெக்ஸ்ட் டைம் உங்க wife பீரியட்ஸ்னு சொன்னா டீ போட்டு குடுங்க,

தங்கச்சி அப்செட்டா இருந்தா chocolate வாங்கி குடுங்க,

அம்மா அப்பிடியே சாய்ந்து அமர்ந்திருந்தா கால் பிடிச்சி விடுங்க,

Friend சோர்வா இருந்தா annoy பண்ணாம, ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க

சற்றாகிலும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து அவர்களது சுமைகளை குறைக்க முயற்ச்சிசெய்யுங்கள்.

குறை சொல்லி, குற்றம் பிடித்து அற்பமாக நடத்தும் கட்டுப்பட்டி தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கன்னியத்தோடும் கரிசனையோடும் உங்கள் சக பாலினத்தை கண்னெடுத்துப்பாருங்கள்.

Appreciate every little things they do for you.

#ஏதோதோணிச்சிபோஸ்ட் #periods #menstration #tamil #tamilwoman

 
 
 

Recent Posts

See All
Glossary - பொதுவான பதங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு...

 
 
 

Comments


Screen Shot 2023-10-26 at 13.20.43.png

Hi, thanks for stopping by!

I know how isolating and overwhelming infertility can be; that's why I'm passionate about sharing my story and using my experience to help others. At Grow with Rosh, I offer a variety of resources designed to support women on their journey to better health. From informative blogs to mentorship opportunities, I aim to create an environment where women can feel heard, empowered, and supported. Together, we can work towards a healthier, happier future.

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page