ஜாடியும் மூடியும்
- Oct 20, 2023
- 3 min read
Updated: Oct 26, 2023

Rightடூ, அருந்ததி படத்தில் அனுஷ்கா அருந்ததியுடைய படத்தை பார்க்கும் போது வாசிப்பாரல்லவா?
“இது எனக்கு நானே எழுதும் ஜன்மசாசனம்”என்று, அதுபோல தான் எனக்கு நானே எழுதிக்கொள்கிறேன்
சில வருடங்களுக்கு பிறகு online memories ல் எனக்கு நானே அட்வைஸ் செய்ததாக இருக்கட்டுமே,ஆனால் வாசிக்கும் நீங்கள் தொப்பி சரியாக இருந்தால் போட்டுக்கொள்ளவும் ஓக்கே..
நீங்கள் திருமணமாகி ஒரு சில பல வருடங்கள் கழிந்து விட்டால் சில நேரம் போரடிப்பது போல தெரியும். திழைத்து திழைத்து காதலித்த, காதல் கணவனும், மனைவியும் காதல் எங்கே என்று தேடுகிற நாட்கள் வரலாம், வராமலும் போகலாம். வராமலே இருக்கட்டுமே
ஆனால் அப்படி வந்தால் என்ன செய்யலாம்? என்பது தான் point.
காதலிக்கும் போது, நாம் நேசிக்கும் நபரை பற்றி அறிந்து கொள்ள தவமாய் தவம் கிடைக்கும் நாம், அதே நபரோடு வாழ்வை பிணைத்து கொண்டபின் அவரை நன்றாக அறிந்து கொண்டபின் அந்த curiosity அதாவது சுவாரசியம் குறைந்து போய், நம்மாள் தானே என்கிற ஒரு அசட்டை மனநிலைக்கு வந்துவிட வாய்ப்புண்டு. காலப்போக்கில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இந்த அசட்டை மனநிலையை நாம் வெளிப்படையாக காண்பிக்கவும் செய்யலாம். அது அடுத்த அடுத்த நிலைக்கு போய் too late என்கின்ற இடத்தை அடையாதபடி தடுக்க தான் இந்த அலாரம்
திருமண வாழ்க்கையில் இந்த ரொமான்ஸ் குறைவதை உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் உணர முடியும், It's a Red Flag!! அப்போதே start taking corrective actions. கூடுமாலானவரை அதை உங்களாலேயே சரிப்படுத்த முடியும், நீங்கள் சரிப்படுத்தாத பட்சத்தில் வைரமுத்து சொன்னதை போல ‘
உட்காரமுடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒழித்து வைத்திருப்பான்...’
உங்கள் நாற்காலியை கைப்பற்ற எவனோ ஒருவன் overtime செய்து கொண்டிருப்பான்.
Please add some spice to your marriage life, specially in your sex life.
இது நமது கலாச்சாரத்தில் ஒரு taboo’ பேசாப்பொருள்! இதனாலேயே இதை வெளியே போய் பிழையான இடத்தில் தேடி பின் ஆப்பிழுத்த குரங்கின் நிலையை அடைந்தவர் பலர்.
Tip 1
ப்ளீஸ் படுக்கைக்கு போகும் முன் தினம் தோறும் குளிக்கவும்
a, you will get a good night sleep,
b, your spouse would be pleased.
சுவைபட தயாரித்த வெங்காய சாம்பார் வாய்க்கு நன்றாக இருந்தாலும், மூக்குக்கு சரிவராதே..
என்னோடு ஒருசில வருஷங்களுக்கு முன் ஒரு Bangladeshi boy வேலை செய்தார், அவர் வரும் போதெல்லாம் சாப்பாடு வாடை அவருடைய perfumeயை override பண்ணி் கப் என்று அடிக்கும், அன்றிலிருந்து இன்றுவரை நான் குளிக்காமல் வெளியே போவதில்லை, jacket மற்றும் coatஐ சமையல் செய்யும் இடத்தில் வைப்பதே இல்லை.
பக்கத்தில் படுத்திருப்பவர் வெள்ளைப்பூடு மற்றும் வெங்காய மணத்தோடு வந்தால் என்ன சொல்வது? அல்லது நாள் முழுதும் குழந்தைகளோடு செலவழித்து அவர்களது சாப்பாடு மணம் அப்படியே ஆடையில் கமழ சொல்லி வேலையில்லை.
Gents, நீங்களும் தான் உங்கள் வியர்வை வாடை ஒன்றும் சலைத்ததல்ல, தயவு செய்து குளிக்கவும், அத்தோடு பற்களையும் விளக்கவும்.
முத்தத்திற்கு மாத்திரமல்ல வாய்க்கும், ஈறுகளுக்கும் கூட நல்லது.
Tip 2,
Invest some time on you
உங்களில் சில மணி நேரங்களை முதலீடு செய்யுங்கள்.
Make up your self, உங்களை அலங்கரித்து கொள்ளுங்கள். பார்வைக்கு பளீச்சென்று துப்பரவாக, அழகாக இருங்கள்.
பொருத்தமான உடைகளை தெரிவு செய்து அதை கச்சிதமாக அணிந்து கொள்ளுங்கள், உங்கள் துணையிடம் கருத்து கேளுங்கள், அவரை விடவா மற்றவர்கள் உங்களை ரசிக்க போகிறார்கள்?
Get a best perfume and spray on your self while you are with your loved one.
என் கணவனாருக்கு விலையுயர்ந்த ஒரு perfume வாங்கி கொடுத்தேன், ஏதாவது நல்ல function போகும் போது use பண்ணுங்கள் என சொல்லியே கொடுத்தேன், ஒவ்வொரு நாளும் படுக்க முதல் அடித்து கொண்டு படுப்பார். என் மனம் பூரித்து போகும் அட, எவ்வளவு என்னை கனப்படுத்துகிறார் என்று.
Tip 3
Take a break - go out! Without kids! it’s ok to be selfish
நீங்களும் உங்கள் துணையும் மாத்திரம் எங்காவது ஒரு outing போய் வாருங்கள். குழந்தைகள் இல்லாமல், சில விஷயங்களில் சுயநலம் தேவைதான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்.Don’t feel guilty. ஒரு weekend break, ஒரு road trip. ஒரு movie night, ஒரு dinner. Where there is a will there is a way. அம்மாவிடமோ, மாமியாரிடமோ, அக்காவிடமோ, நண்பர்களிடமோ குழந்தைகளை விட்டுவிட்டு enjoy yourself.
அப்போது தொல்லைபேசியை flight mode ல் போட்டு விட்டு கூடியவரை கைகோர்த்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு தூரம் நடந்து செல்லுங்கள். பழைய ஞாபகங்களை அசைபோடுங்கள்.
Tip 4
Stay healthy and active
உங்கள் ஆரோக்கியம் பேணுங்கள், சரீர ஆரோக்கியம் விலையுயர்ந்த பொக்கிஷம், அடிக்கடி டயர்ட் ஆவது, பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்குவது, சாப்பிட்டது செரிக்காமல் தடுமாறுவது, நித்திரையல்லாமல் தத்தளிப்பது இவை எப்பொழுதுமே நல்லதல்ல. Stay fit. Six pack ஓடு இருக்கும் எந்த ஆணுமே கவர்ச்சி தான், அந்த சபலத்தை ஏன் உங்கள் மனைவிக்கு நீங்கள் தர வேண்டும்?
Tip 5
உங்கள் மன உணர்வுகளை வெளிப்படையாக பேசுங்கள். I am feeling upset, I am feeling overwhelmed அல்லது, I feel insecure என்று சொல்லுங்கள். தாம்பத்தியத்தில் கூட I am tired, I can’t என்பதை வெளிப்படையாக பேசுதலே நல்ல ஆரம்பம்.
Tip 6,
அடிக்கடி முத்தமிட்டு கொள்ளுங்கள், அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் அதுவும் ஒன்று, முன்நெற்றி முத்தத்திற்கு ஈடு இணை ஏதுமல்லை
Tip 7,
சண்டை போட்டு கோபித்து கொண்டாலும், இடைவெளியில்லாமல் படுத்துக்கொள்ளவும், ஆயிரம் வார்தைகளை விட ஒரு ஸ்பரிசத்துக்கு வல்லமை அதிகம்.
இந்த அம்மிக்கு இந்த குழவிதான்,
இந்த ஜாடிக்கேற்ற மூடி சரியாக தான் படைக்கப்பட்டு இருக்கிறது, காலப்போக்கில் பெறுமான தேய்வு அடையுமல்லவா? அதுபோல தான் wear and tear defects ஒரு mot கொடுத்தால் சரியாகிவிடும்.
Try பண்ணி பாருங்கள், ஏதோ என்னால் முடிந்தது. அப்புறம் thanks சொல்லலாம்.
பிகு: இது எனக்கு, றொஷ்! அந்த சிவப்பு கலர் நைட்டியை தயவு செய்து தலையை சுற்றி வீசவும்.



Loved each and every line. Thank you Rosh.