மாதவிடாய் / பிரியட்ஸ் என்றால் என்ன?
- Oct 20, 2023
- 2 min read
Updated: Nov 2, 2023

மாதவிடாய் எனப்படுவது, ஒரு பெண் பருவமெய்திய நாளிலிருந்து மாதாமாதம் அல்லது 28 நாட்களுக்கு ஒரு முறை, அவளுடைய பெண்ணுறுப்பின் வழியாக உதிரம் வெளிப்படுதல் ஆகும்.
இது, ஒவ்வொருவரின் உடல்வாகிற்கமைய 20 நாளிலிருந்து 35 நாட்களுக்கிடையில் ஏற்படலாம். இந்த பதிவில் இதை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
ஆங்கிலத்தில் இது Menstrual circle/Periods என்று அழைக்கப்படும். குழந்தை பருவத்தில் இருந்து ஒரு பெண் பதின்பருவத்தில் பிரவேசிக்கும் போது அவளுடைய உடலில், ஊக்கிகளில் அதாவது Hormonesகளில் மாற்றம் ஏற்படும். ஒரு பெண் இன்னொரு உயிரை பிறப்பிப்பதற்கு அவளுடைய உடல் தயாராகும். முதல் முறை இப்படியான மாற்றம் சம்பவிக்கும் போது அதை பூப்பெய்தல் என்று சொல்லி கொண்டாடுவது வழக்கம்.
மாதவிடாய் சமயத்தில் உடலில் என்ன நடக்கிறது?
ஒரு பெண்ணின் கர்ப்பப்பையை (womb) சுற்றிய அவயவங்களில் சூலகம் உண்டு. அதாவது Ovariers என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இந்த சூலகங்களில் கடுகை பார்க்கிலும் சிறிய அளவிலான சூல்கள்(egg) உண்டு. ஒரு பெண் பிறகும் போதே அவள் 1-2 மில்லியன் சூல்களோடு அதாவது கரு முட்டைகளோடு (oocytes) பிறப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மூளையிலுள்ள pituitary gland இன் மூலம் சுரக்கப்படும் ஹோர்மோன்களின் மூலம், சூலகங்கள் மாதாமாதம் ஒரு சூலை அதாவது ஒரு eggஐ விடுவிக்கும்.
இது ஆங்கிலத்தில் ovulation என்று அழைக்கப்படும். இந்த ovulation சமயத்தில் சூலகங்களில் உள்ள கருமுட்டைகளில் எந்த கருமுட்டை (dominant folicle /matured egg )அதாவது சூல் முதிர்ச்சியடைத்துள்ளதோ அந்த சூல் சூலகத்திலிருந்து கருக்கட்டலுக்கு (fertilasation) தயாராக விடுவிக்கப்படும். குழந்தை பிறப்பிற்கு ஆயத்தமான தம்பதிகள் இந்த சமயத்தில் உடலுறவு கொள்ளும்படி மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுவதுண்டு; காரணம் விடுவிக்கப்பட்ட கருமுட்டை 12-24 மணி நேரம் மாத்திரமே உயிரோடு இருக்கும்.இந்த சமயத்தில் உறவு கொள்கையில் கர்ப்பமடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
இப்படியாக விடுவிக்கப்படும் சூல் பலோப்பியன் குழாயின் (fallopian tube)
வழியாக கர்ப்பப்பையை நோக்கி பயணிக்கும்.

அந்த கருமுட்டைகள் அப்படி பயணிக்கும் வழியில், ஆணின் விந்தணுவை சந்தித்து கருக்கட்டல் நடைபெறுமாயின் அந்த கரு பலோப்பியன் குழாயின் மூலமாக கருப்பையின் சுவர்களுக்கு வந்து கருப்பை சுவரில் தன்னை இணைத்துக்கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய காரியங்களை நடப்பிக்கும். எப்போது சூலகத்திலிருந்து சூல் விடுவிக்கப்படுகிறதோ அதே சமயத்தில் கர்ப்பப்பை ஒரு குழந்தையின் வரவுக்கு தயாராக தன்னுடைய சுவரை தடிமனாக மாற்றிக்கொள்ளும்( grow and thickening uterus lining). கருக்கட்டல் நடைபெறாத சமயத்தில், கருவோடு கூட வளர்ச்சியடைந்த அந்த கருப்பை சுவர் தன்னை தானே அழித்துக்கொண்டு பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக உதிரத்தோடு கூட வெளிப்படும் இந்த நிகழ்வே மாதவிடாய் எனப்படும். இந்த சுழற்சி மாதாமாதம் 28 நாட்களுக்கு ஒருமுறை பெண்ணின் உடலில் நடைபெறும்.
சில பெண்களுக்கு 3-5 நாட்களும் சிலருக்கு 7 நாட்களளவும் இது நீடிக்கலாம். உதிரம் வெளிப்படும் முதல் நாள் மாதவிடாயின் முதல் நாளாக கருதப்படும் ( fresh blood) . இந்த முதல் நாளிலிருந்து நடுப்பகுதியில் அதாவது 13ம்,14ம் நாளளவில் மறுபடியும் இந்த சுழற்சி ஆரம்பிக்கும். மறுபடியும் கருமுட்டை வெளிப்பட்டு கருக்கட்டலுக்காக காத்திருக்கும். இதுவே மாதவிடாய் சுழற்சி ஆகும்.
மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், மேலும் நீங்கள் அறிய விரும்பும் காரியங்களை எனக்கு தெரியப்படுத்துங்கள்.
நன்றி.
Reference list
fertility, C. (n.d.). Female Reproductive System. [Online] Available at: https://www.conceptfertility.co.uk/fertility-testing-info/causes-of-female-infertility/womb-and-fallopian-tubes/ [Accessed 20 Oct. 2023].
NHS (2019). Overview - Periods. [online] NHS. Available at: https://www.nhs.uk/conditions/periods/.
Did you find this useful?
yes
No



Comments