top of page
Search

வஜைனல் டிஸ்சார்ஜ் என்றால் என்ன?

  • Oct 21, 2023
  • 4 min read

Updated: Nov 2, 2023


அனேகமாக அனைத்து கலாச்சாரங்களிலும், மொழிகளிலும் இழிவாகவும், அசிங்கமாகவும் அல்லது ஆபாசமாகவும் காண்பிக்கப்படும் நம்முடைய வஜைனா (vagina) அதாவது பெண்ணுறுப்பு அல்லது யோனி மிகவும் விசித்திரமானது மற்றும் மர்மமானது. நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவரானால் எப்படி விசித்திர வினோதமாக அவர் உங்களை படைத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லலாம், அப்படி நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராயின் ஒரு பெண்ணின் உடல் எவ்வளவு விந்தையாக உருவாக்கப்பட்டிருக்கிறது அல்லது பரிணமித்திருக்கிறது என்று வியந்து கொள்ளுங்கள்.


ஒரு பெண் பூப்பெய்த நாளிலிருந்து அல்லது அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்னிருந்து அவளுடைய மாதவிடாய் நிற்கும் காலமட்டும் அவளின் உடலும், ஹார்மோன்களும், உடலின் அங்கங்களும் வித்தியாசமான விதத்தில் செயல்படும். அதில் மிகவும் முக்கியமானதும் நம்முடைய கண்களுக்கு தெரிகிறதுமான ஒரு பாகம் தான் நம்முடைய vagina / பெண்ணுறுப்பு அல்லது யோனி. இந்த யோனியிலிருந்து பூப்பெய்த நாள் முதல் கொண்டு அவளுக்கு மெனோபாஸ் (Menopause) அதாவது மாதவிடாய் நிற்கும் காலமட்டும் நீங்கள் அவதானித்து வந்தால் சில சுரப்புகள் / வெளியேற்றங்கள் (discharge) நிகழ்வதை நீங்கள் பார்க்க முடியும். நமக்கு அந்த வெளியேற்றங்களை பற்றிய அறிவு (ignorant) இல்லாதிருக்குமாயின் அதை பற்றிய பயமும், கலக்கமும் அல்லது கவலையும், அல்லது கவனயீனமும் கூட ஏற்படலாம்.

எனக்கு வித்தியாசமான அல்லது வழமைக்கு மாறான டிஸ்சார்ஜ் நிகழும் போது நான் உடனே கூகுளை நாடி தேடி அலசி ஆராய்ந்து பார்ப்பதுண்டு. காரணம் இது நார்மல் தானா அல்லது ஏதேனும் அசாதாரணமான மாற்றங்கள் எனது உடலில் நிகழ்கின்றதா என்று நான் தெரிய விரும்புவேன். நீங்களும் கூட அப்படி பட்டவராக இருப்பின் இந்த பதிவு உங்களுக்கு தான்.


பெண்ணுறுப்பிலிருந்து வெளியேற்றல் (vaginal discharge) நடைபெறுவது மிகவும் சாதாரணமான இயற்கையான ஒரு நிகழ்வு. மாதவிடாயின் (periods) போதும் அதற்கு முன்னும் பின்னும், தாம்பத்தியத்தின் (intercourse) போதும் பெண்ணுறுப்பிலிருந்து திரவங்கள் வெளிப்படுவது சகஜம். ஆனாலும் அந்த திரவங்களின்/வெளியேற்றங்களின் நிறத்தின் அடிப்படையில் மருத்துவ ஆய்வுகள் சில காரியங்களை நமக்கு தெரிவிக்கிறது, அது ஒரு நோயின் ஆரம்ப கட்ட நிகழ்வாக (underlying health issue) அல்லது அடையாளமாக இருக்கலாம் அல்லது நோய்த்தொற்றாக (Infection) இருக்கலாம் எதுவாக இருப்பினும் ஆரம்ப காலத்திலே அதை அறிந்து கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது.


பெண்ணுறுப்பில் இருக்கும் ஒரு சுரப்பியிலிருந்து (gland) ஒவ்வொரு நாளும் சுரப்புகள் சுரக்கும், இது சாதாரணமான ஒரு விடயம் தான். பெண்ணுறுப்பில்

இருக்கும் அசுத்தங்களை, செத்த உயிரணுக்களை, கழிவுகளை (debris,old cells,dirts) இந்த திரவத்தின் மூலம் அது வெளியே தள்ளும். இது ஒரு சுத்திகரிப்பின் படிமுறை. எப்படி நமக்கு கண்களில் தூசு விழுந்தால் கண்ணீர் சுரக்க சுரப்பிகள் உண்டோ அதே போல, மிகவும் பெறுமதி வாய்ந்த நம்முடைய அவயவமான இந்த பெண்ணுறுப்பை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும், இனப்பெருக்க உறுப்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவும் இந்த சுரப்பிகள் உதவுகின்றது.


ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் சுரக்கும் சுரப்புகள் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபாடானவை; அவை அவளுடைய மாதவிடாய் நாட்களை பொருத்தும் அவளுடைய உடலின் செயல்பாடுகளை பொருத்தும் நிறத்தில்,(colour) தன்மையில், (consistency) பதத்தில் மாறுபடும்.


மாதவிடாயின் முதல் நாள் 1-5 - கர்ப்பப்பையின் சுவர் உதிர்தலின் நிமித்தம் மாதவிடாயின் ஆரம்ப நாட்களில் கடுங்சிவப்பு, பிரவுன் , பிங்க் போன்ற நிறங்களில் வெளிப்படுதல் இருக்கும்.


6-14ம் நாள் - மாதவிடாயின் முடிவிலிருந்து பெண்ணுறுப்பின் வழியாக வெளிப்படும் சுரப்புகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும். மாதவிடாயின் நடுப்பகுதியில் அதாவது 10-14 ம் நாட்களிலிருந்து கருமுட்டை முதிர்ச்சியடைகிற செயல் நடைபெறுகிறதின் நிமித்தம் மறுபடியும் அது மங்கலான/கலங்கின நிறத்தில் கொஞ்சம் பிசுபிசுவென தடிப்பாக, வெள்ளை அல்லது, பழுப்பு, மஞ்சள் நிறத்தில் ஒட்டும் தன்மையோடு வெளிப்படும்.


14-25 ம் நாள் - கருமுட்டை வெளிப்பட ( Egg release) சில நாட்களுக்கு முன், அந்த முட்டை பயணிப்பதற்கு ஆயத்தமாக கருப்பை தயாராகும் இந்த நிலையில் பெண்ணுறுப்பிலிருந்து வெளிப்படும் திரவம் மெல்லியதாய் சளித்தன்மையுடன் வலு வழுவென்று இருக்கும். முட்டையின் வெண்கரு ( Egg white consistency) எப்படி இருக்குமோ அதே போல கருமுட்டை வெளிப்பட (Ovulation) ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மாற்றம் நேரிடும். கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிப்படவுடன் மறுபடியும் அது மங்கலான கலங்கிய, வெண்மை மற்றும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாய் ஓட்டும் தன்மையோடு மாறிவிடும்.


25-28ம் நாள் - இந்த நாட்களில் குறைந்த அளவில் அல்லது எந்த விதமான திரவமும் சுரக்காமல் இருக்கும்.




சிவப்பு, கடுஞ்சிவப்பு, பிரௌன் மற்றும் கரல் நிறம்

இது வழமையான எந்த விதமான பயத்திற்கும் இடமில்லாத நிறம். மாதவிடாய் சமயங்களில் அல்லது அதற்கு முன் மற்றும் பின்னாட்களில் இந்த நிறத்தை பார்க்கலாம். சிவப்பு உதிரம் புதிய ரத்தத்தையும், பிரவுன் பழைய ரத்தத்தையும் குறிக்கும். இந்த பிரவுன் நிறம், உங்கள் உடல் தன்னை சுத்திகரித்து கொள்வதையும், பழைய ரத்தம் மற்றும் கழிவுகளை உங்கள் உடல் வெளியேற்றுவதையும் குறிக்கும்.

சில நேரம் மெல்லிய பிரவுன் வெளியேற்றம் உங்கள் உடலில் கருமுட்டை வெளிப்படும் (Ovulation)நிகழ்வில் கூட வெளியேறலாம்.

சில நேரம் நீங்கள் கருத்தடை மாத்திரைகள் (contraception) உபயோகப்படுத்துவத்தின் நிமித்தம் கூட இதை பார்க்க முடியும்.

உங்களுடைய cervix அதாவது கருப்பை வாய் அழற்சியடைந்ததின் நிமித்தம் கூட இந்த வெளியேற்றம் நடந்திருக்கலாம்.

கடைசியாக நீங்க அதிக மனஅழுத்தம் அல்லது மனசோர்வு அடைந்ததில் மூலம் உங்கள் உடல் சில அறிகுறிகளை காண்பிக்கலாம்.

ஆனால் அதிக அளவில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு இந்த வெளியேற்றம் நடைபெறுமாயின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.




வெள்ளை , பழுப்பு, மெல்லிய மஞ்சள்

இந்த வெண்மையின் நிறங்கள், மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் காணப்படலாம். இது ஆரோக்கியமான ஒரு அறிகுறியாக தான் இதுவரை கருதப்படுகிறது. ஆயினும், பன்னீர் சீஸை ( cottage cheese) உதிர்த்தால் எப்படி இருக்குமோ அதுபோல அல்லது நாற்றத்துடனோ (strong smell) மற்றும் அரிப்பு அல்லது கடியோடு கூட இந்த வெண்மைப்படல் நிகழுமாயின் அது ஒரு அழற்சி (yeast infection)அல்லது பூஞ்சை தொற்றுக்கு அறிகுறியாக இருக்கலாம். அந்த நிலையில் மருத்துவரை அணுகுவது அவசியம்.







மஞ்சள், கடும் மஞ்சள் மற்றும் பசிய பச்சை நிறங்கள்


உங்களிலிருந்து மெல்லிய பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பாடு நிகழுமாயின் அது சாதாரணமான அறிகுறி தான். சில நேரம் உங்கள் உணவு பழக்கவழக்கத்தினால் ( dietary change) இந்த மாற்றம் நேரிட்டிருக்கலாம். ஆனால் கடும் மஞ்சள், பச்சை நிறங்களில் உங்கள் பெண்ணுறுப்பு திரவங்களை வெளிப்படுத்தினால் நீங்கள் நுண்கிருமி (bacterial) அல்லது பாலியல் நோய்களினால் (sexually transmitted infection) பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். கடும் மணத்துடன் தடிமனான உறைந்த நிலையில் ( thick and clumphy) வெளிப்பாடு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அறிவுறுத்தப்படுகிறது.





பிங்க்

மாதவிடாயின் முன்னாட்களில் இந்த பிங்க் நிறத்தில் வெளிப்பாடு நடைபெறலாம். இதை ஆங்கிலத்தில் ஸ்பாட்டிங் (Spotting) என்று அழைப்பார்கள். சலித்தன்மையோடு கூடிய அந்த வெண்மைப்படலில் சிறிதளவு ரத்தம் கலந்ததின் நிமித்தமே இவ்வாறாக வெளிப்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மட்டுமல்லாமல் நீங்கள் கருத்தரித்திருந்தால், அந்த கரு கர்ப்பப்பையோடு இணைகிற நிகழ்வில் (implantation ) சிறிதளவு உதிரம் வெளிப்படும். ஆரம்ப கால கர்ப்பத்தில் (Early pregnancy)அதன் பொருட்டு கூட பிங்க் நிறத்தில் வெளிப்படலாம். சிலருக்கு கருமுட்டை வெளியேறுகிற ( ovulation) பொழுது கூட பிங்க் நிறத்தில் வெளிப்படலாம். உடலுறவின் பின்னர் பிங்க் நிறத்தில் வெளிப்படுமாயின் சிலநேரம் அது உங்கள் இனப்பெருக்க உறுப்பில் ஏற்பட்ட சிறிய தசை கிழிவு அல்லது காயத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.







சாம்பல்


சாம்பல் நிறத்தில் உங்கள் இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் வெளிப்பட்டால் அது ஆரோக்கியமற்றதாகவும்

பாக்டீரியல் வஜைநோசிஸ் bacterial vaginosis (BV) என்கிற நோயினாலும் அப்படி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.


அழற்சி

கடி

துர்மணம்

யோனி பகுதியை சுற்றி சிவப்பாய் இருத்தல் இந்த நோயின் அடையாளம். உடனடியாக மருத்துவரை இந்த நிலையில் அணுக வேண்டும்.



பெண்களின் பெண்ணுறுப்பு அனுதினமும் சுரப்புகளை சுரந்து கொண்டிருக்கும். சாதாரணமாக இது பயமில்லாத ஒரு நிகழ்வு தான், இதை குறித்து கலக்கப்பட்ட அவசியமில்லை. அனால் வழமைக்கு மாறான வித்தியாசமான சற்றே உங்களுக்கு யோசனையை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் மனப்பயத்தை தடுக்கும் விதத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.




Reference list

 

Miskry, D.T. (n.d.). Brown Discharge. [online] www.always.co.uk. Available at: https://www.always.co.uk/en-gb/tips-and-advice-for-women/vaginal-discharge/brown-discharge/ [Accessed 21 Oct. 2023].

Redhead, T. (2020). Vaginal discharge color guide: Causes and when to see a doctor. [online] www.medicalnewstoday.com. Available at: https://www.medicalnewstoday.com/articles/322232.



 
 
 

Recent Posts

See All
Glossary - பொதுவான பதங்கள்

நீங்கள் உங்கள் குழந்தையின் வரவுவை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தால், அல்லது அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தால், அல்லது அதற்கு...

 
 
 

Comments


Screen Shot 2023-10-26 at 13.20.43.png

Hi, thanks for stopping by!

I know how isolating and overwhelming infertility can be; that's why I'm passionate about sharing my story and using my experience to help others. At Grow with Rosh, I offer a variety of resources designed to support women on their journey to better health. From informative blogs to mentorship opportunities, I aim to create an environment where women can feel heard, empowered, and supported. Together, we can work towards a healthier, happier future.

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

Let's Connect

Thank you for reaching out!

© 2021 by Grow with Rosh. All rights reserved.

bottom of page